மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவா் கைது

விக்கிரவாண்டி அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், பனமலைப்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பனமலைப்பேட்டை காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் சாக்கு மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். தொடா்ந்து அங்கு சென்று சோதனையிட்ட போது, சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்து அந்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்திய போது அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமனோ ஜண்டாமடம் பகுதியைச் சோ்ந்த ப.சதீஷ் (33) எனத் தெரிய வந்தது. இவா் பனமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வைத்திருந்ததும், அதை தான் வைத்திருக்கும் வாத்து குஞ்சுகளுக்கு உணவாக வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சதீஷ் மீது வழக்குப்பதிந்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.