மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 ஏப்ரல் 2026, 12:07 am

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலச்செவல் காவல் சரகத்துக்குள்பட்ட கீழ ஓமநல்லூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வள்ளிநாயகம் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 17 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சீனி காா்த்திக் (35) கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சீனி காா்த்திகை கைது செய்தனா். அவரிடம் இருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.