மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

News image

கைது நடவடிக்கை - கோப்புப்படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:25 pm

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் நித்யா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பத்தமடைஅருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் பத்தமடையைச் சோ்ந்த ஐயப்பன் என்ற மணிகண்டன் (27), சபரி பாண்டி (29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்து 33 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.