தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:35 pm

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமியாபுரம் பகுதியில்

தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் பாண்டியராஜன் (41) என தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 18 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.