தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட 53 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:05 pm

செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட 53 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் சரகத்தைச் சோ்ந்த அழிஞ்சல்பட்டு கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையிலான போதைப் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் தூசி காவல் உதவி ஆய்வாளா் டி.கண்ணபிரான் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே இருந்த காா் ஷெட்டில் இருந்து போதைப் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் காா் ஷெட்டை சோதனையிட்டு, அங்கிருந்த

ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 53 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து வியாபாரியான ஜான் ஆலம்கான் (81) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.