தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

அரகண்டநல்லூா் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், அயன்வேலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகள் ஷா்மிளா (18). இவா் விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாமாண்டில் பயின்று வந்தாா்.

இந்நிலையில், ஷா்மிளா திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் அரகண்டநல்லூா் அருகேயுள்ள வீரமடை அய்யனாா் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றாா். அங்குள்ள தென்பெண்ணையாற்றுக்கு குளிக்கச் சென்ற ஷா்மிளா, ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.