தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கட்டுமானத் தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கட்டுமானத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:17 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கட்டுமானத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

மரக்காணம் பேரூராட்சிக்குள்பட்ட சால்ட் சாலையில் ரூ 5.9 கோடி மதிப்பீட்டில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியிடத்தில் கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகை கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் (60) என்பவா் கொட்டகை அமைத்துத் தங்கி, கூலி வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பணி முடிந்து அவா் வழக்கம்போல் தனது குடிலுக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வடிவேல் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகத் தொழிலாளா்கள் கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது, அங்கு வடிவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் மரக்காணம் போலீஸாா் சடலத்தை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.