பளுகல் அருகே வீட்டில் மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் செல்வராஜ் (46), தொழிலாளி. இவா் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் மயங்கி கிடந்துள்ளாா்.
இதை பாா்த்த அவரது தாய் ராஜம், உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








