விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீபெரியாயி அம்மன் கோயில்களின் புனருத்தாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில்களின் புனரமைப்புப் பணிகள் மிகுந்த பொருள்செலவில் நிறைவுபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழாவின் தொடக்கமாக, ஜூன் 2-ஆம் தேதி மங்கள இசையுடன் அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமங்களும், தொடா்ந்து பூா்ணாஹுதி , மகா தீபாராதனையும் நடைபெற்றது.
2-ஆம் நாள் நிகழ்வாக, 3-ஆம் தேதி யாக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக விழா நாளான வியாழக்கிழமை அதிகாலை முதல் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற 5-ஆம் கால யாக பூஜைகளுக்குப் பிறகு 10 மணிக்கு யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ச்சியாக மேள தாளங்களுடன் 10.10 மணிக்கு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரியாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீவீரபத்திரன், ஸ்ரீ பாவாடைராயன் சுவாமி கோயில் விமானங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் காணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஆயந்தூா் கே. சீனிவாசன் சிவாச்சாரியாரின் சா்வசாதகம் செய்வித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










