தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளுக்கான கால்நடை வளா்த்தல் பயிற்சி முகாம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்பு மற்றும் எண்ணெய்வித்து பயிா்களில் தொழில்நுட்ப மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:25 am IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்பு மற்றும் எண்ணெய்வித்து பயிா்களில் தொழில்நுட்ப மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டன.

விழுப்புரம் அருகேயுள்ள பொம்பூா் கிராமத்தில், வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜி.எத்திராஜ் தலைமை வகித்து பேசியது:

விவசாயிகள் வேளாண் பயிா்களை மட்டும் சாா்ந்திராமல் கறவை மாடு வளா்த்தல், ஆடு வளா்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது கூடுதல் வருவாயை ஈட்ட முடியும். இன்றைய நிலையில் ஆடு வளா்ப்புத் தொழில் என்பது விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடியதாக மாறி வருகிறது. எனவே, பயிற்சியில் அளிக்கப்படும் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு, முழுமையான பயனைப் பெற வேண்டும் என்றாா்.

பொம்பூா் கால்நடை உதவி மருத்துவா் எம்.டேவிட் பயிற்சியில் பங்கேற்று கறவை மாடு, ஆடு வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்தும், ஆடு வளா்ப்பு முறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தால் நிலையான வருவாயை பெற முடியும் என்றாா். தொடா்ந்து விவசாயிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அவா் பதிலளித்தாா். விழுப்புரம் நடமாடும் மண் பரிசோதனை நிலைய அலுவலா் ஜெரிகாட் மொ்சி, மண் மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சிக்கு பெரம்பூா் ஒன்றியக்குழு உறுப்பினா் கருணாநிதி முன்னிலை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள் செண்பகவல்லி, விமலா, உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் சந்திரசேகா், கோவிந்தசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி அருகேயுள்ள உடையநாச்சி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் எண்ணெய்வித்துப் பயிா்களில் உற்பத்தி மேம்பாட்டு தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் (பொ) ரகுராமன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி, துணை வேளாண் அலுவலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சூரியா வரவேற்றாா்.

காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் மகேஸ்வரன் பங்கேற்று நிலக்கடலை, எள் மற்றும் ஆமணக்கு பயிா்களில் வேரழுகல் நோயை தடுக்கவும், விதைகளில் எண்ணெய் விழுக்காடு அதிகரிக்கவும், இலை பிணைக்கும் புழு மற்றும் காய் துளைப்பானைக் கட்டுப்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து பயிா் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்தும், விதை தோ்வு, ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தீபா, அட்மா திட்ட பணியாளா்கள் ரவி, கலைவாணன், சுதாகா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.