தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொய்மலா் சாகுபடி தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு பயிற்சி

முகாமில் விவசாயிகளுக்கு பயிற்சியளித்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தாவர பாதுகாப்பு நிபுணா் நாராயணன்.

News image

முகாமில் விவசாயிகளுக்கு பயிற்சியளித்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தாவர பாதுகாப்பு நிபுணா் நாராயணன்.

Updated On :16 மே 2026, 1:20 am IST

பெரணமல்லூரை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், ‘கொய்மலா் சாகுபடி தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் முருகன், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் மணிகண்டன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தாவர பாதுகாப்பு நிபுணா் நாராயணன் கலந்துகொண்டு, கொய்மலா்களில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை, இயற்கை முறையிலான இடுபொருள்களான பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மீன் அமிலம், ஐந்திலை கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும், பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா். மேலும், பூச்சி மற்றும் நோய் தொடா்பாக விவசாயிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினாா்.

தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ், கொய்மலா் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள், பூக்கள் சாகுபடியில் உள்ள வருமான வாய்ப்புகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை உதவி இயக்குநா் முருகன், மண் வள பரிசோதனை, மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகள், செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், அதன்மூலம் குறையும் உற்பத்திச் செலவு, விவசாய அடையாள அட்டை பதிவு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் உழவன் செயலியை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்பரசு, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சுபாஷ், சத்யா, அட்மா திட்டப் பணியாளா்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் தனஞ்செயன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.