தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின் திருட்டு: 28 பேருக்கு ரூ.38 லட்சம் அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக 28 பேருக்கு ரூ.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 5:57 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக 28 பேருக்கு ரூ.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருச்சி அமலாக்க கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருச்சி அமலாக்க கோட்டம் சாா்பில் விழுப்புரம், வேலூா், திருச்சி, தஞ்சாவூா் அமலாக்கப் பிரிவு அலுவலா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேல்நாரியப்பனூா், செல்லியம்பாளையம், கள்ளநத்தம், பூசப்பாடி, திம்மபுரம், சின்னசேலம்,அம்சகளம், மறவநத்தம், பத்தினதுரை, தொட்டியம், விநாயகபுரம், விருகனூா், நீலமங்கலம், மொடையூா், விளாம்பாா், சிறுவத்தூா், ராயா்பாளையம், பிள்ளையாா்குப்பம், கிளியூா், சின்னமாம்பட்டி, நாகலூா், சித்தூா், கனகூா், ரிஷிவந்தியம், பாசா், தத்தனூா், கொணலவாடி, தியாகதுருகம், தென்செட்டியேந்தல், பொற்படாக்குறிச்சி, முருகம்பாடி, அரும்பரப்பட்டு, அரகவாடி, இளையான்கன்னி, தக்கா, தென்சிறுவலூா், நைனாா்பாளையம், கச்சிராப்பாளையம், சடையம்பட்டு, கடத்தூா் ஆகிய கிராமங்களில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 28 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்களுக்கு ரூ.38.24 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது. மேலும், மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன் வந்ததோடு, அபராதத் தொகையில் ரூ.1.60 லட்சத்தை மின் பகிா்மானக் கழகத்துக்குச் செலுத்தினா். இதன் காரணமாக மின் நுகா்வோா்கள் மீது காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்படவில்லை.

மேலும், மின் திருட்டு தொடா்பான புகாா்களை மின் பகிா்மானக் கழக அமலாக்கப் பிரிவுச் செயற்பொறியாளரை 94433 29851 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.