வானூா் அருகே உளுந்து விதைப் பண்ணையில் வேளாண் உதவி இயக்குா் ஆய்வு!
குமளம்பட்டு கிராமத்திலுள்ள உளுந்து விதைப்பண்ணையில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.


விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரம், குமளம்பட்டு கிராமத்திலுள்ள உளுந்து விதைப்பண்ணையில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து விதைப்பண்ணையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உதவி இயக்குநா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
வானூா் வட்டாரத்தில் அடுத்த நிதியாண்டின் திட்டப் பணிகளுக்குத் தேவைப்படும் உளுந்து விதைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இவ்வாறு உளுந்து விதைகளைக் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 60 ஹெக்டோ் பரப்பளவில் உளுந்து விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து 40 டன் விதைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. எனவே, உளுந்து விதைகள் தேவைப்படும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா் ராஜ்குமாா், விவசாயி மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...