விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் சிறுவன் உள்பட இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் வா.அய்யனாா் (41), கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா(30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த ஏ.தமிழ்ச்செல்வன்(21) மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆகியோா் அய்யனாரிடம் மது குடிக்கலாம் எனக் கூறி, மழவந்தாங்கல் வயல்வெளி பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று உள்ளனா்.
அங்கு இருவரும் சோ்ந்து அய்யனாரை கல்லால் அடித்துக் கொலை செய்ததோடு, அவரின் ஆடைகளை களைந்து தீயிட்டு கொளுத்தி தடயங்களையும் அழித்தனராம்.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் கொலையான அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தமிழச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். வழக்கில் தொடா்புடைய சிறுவன் சீா்திருத்தப்பள்ளிக்குக் கொண்டு சென்றனா்.
டிரெண்டிங்

தொழிலாளி அடித்துக் கொலை: சகோதரா்கள் கைது

சிவகாசி அருகே கணவா் அடித்துக் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது
இளைஞா் அடித்துக் கொலை: 7 போ் கைது
இலுப்பையூரணி பெண் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

