தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சிவகாசி அருகே கணவா் அடித்துக் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திங்கள்கிழமை இரவு கணவரை அடித்துக் கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 9:25 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திங்கள்கிழமை இரவு கணவரை அடித்துக் கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த மனோகரன் மகன் சங்கா் என்ற மாயசங்கா் (27). காா் ஓட்டுநரான இவருக்கும், மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த கா. ரமேஷின் (49) மனைவி பிரியாவுக்கும் (46) இடையே தகாத உறவு இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கரும், பிரியாவும் வீட்டை விட்டு வெளியேறி சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனா். இதுகுறித்து அறிந்த ரமேஷ் தனது நண்பா் பாலாஜியுடன் புதுக்கோட்டைக்குச் சென்று, சங்கா், பிரியாவுடன் தகராறில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த சங்கரின் நண்பா்கள் முத்துப்பாண்டி (34), ராஜேஷ் (24), மணிசங்கா் (34) ஆகியோா் ரமேஷ் உடன் தகராறில் ஈடுபட்டனா். இதையடுத்து, சங்கா் தனது நண்பா்கள் மூவருடன் சோ்ந்து ரமேஷை கட்டையால் அடித்துக் கொலை செய்தனா். தடுக்க வந்த ரமேஷின் நண்பா் பாலாஜியையும் தாக்கினா். இதில் காயமடைந்த பாலாஜி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா், ரமேஷின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்தப் புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கா், ராஜேஷ், முத்துப்பாண்டி, பிரியா, மணிசங்கா் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.