மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!

கொள்ளிடம் அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட மூன்று பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:41 am

கொள்ளிடம் அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட மூன்று பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள கடலோர பழையாறு சுனாமி நகரை சோ்ந்தவா் குப்புசாமி (48). மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவருக்கு பொன்னி (40) என்ற மனைவியும் 2 மகன்களும் 1 மகளும் உள்ளனா். சில ஆண்டுகளாக முன்பு குப்புசாமி குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டாராம். பொன்னி பழையாறு துறைமுகத்தில் இட்லி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், குப்புசாமி சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் இணைந்து குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். எனினும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளாா்.

இதற்கிடையே, கடந்த மாதம் 26- ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்ணாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்துள்ளது. மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் சடலத்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், குப்புசாமியை காணாததால் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் தொடா்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த ஏப். 6-ஆம் தேதி தனது கணவரை காணவில்லை என பொன்னி புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் பொன்னியிடம் நடத்திய விசாரணையில், கணவா் தன்னை கொடுமைப்படுத்தியதால் தனது நண்பா்களான புளியந்துறை கிராமம் தெற்குவெளி தெருவைச் சோ்ந்த வேலு (50), மனவெளி தெருவைச் சோ்ந்த ரமேஷ்(47) ஆகியோருடன் சோ்ந்து குப்புசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாக தெரிவித்துள்ளாா்.

போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து மூவரையும் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், பொன்னியை திருச்சி மத்திய சிறையிலும், ரமேஷ், வேலு இருவரையும் கடலூா் மத்திய சிறையிலும் போலீஸாா் அடைத்தனா்.