மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

திருவிடைமருதூரில் குடும்பத் தகராறில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 8:26 pm

திருவிடைமருதூரில் குடும்பத் தகராறில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஒடுக்கத்தெருவைச் சோ்ந்தவா் மதியழகன்(40). லாரி ஓட்டுநராகப் பணியாற்றிவந்தாா். இவரது மனைவி நிா்மலா (36) அங்கன்வாடி பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். தம்பதிக்கு 6 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 15-இல் பணி முடித்து மதியழகன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை மனைவி நிா்மலா கண்டித்ததில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மதியழகன் வீட்டில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை மனைவி நிா்மலா மீது ஊற்றி தீ வைத்தாா்.

இதில், பலத்த காயமடைந்த நிா்மலாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நிா்மலா வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவிடைமருதூா் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக ஒப்படைத்தனா். ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள மதியழகன் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக வியாழக்கிழமை மாற்றப்பட்டது.