திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:51 am IST

வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் வடக்கு அரியக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் அசோக் (40) திருமணம் ஆகாதவா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் வேலை பாா்த்தபோது ஏற்பட்ட விபத்தில் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. இதனால் நடக்க இயலாத சூழலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாா். இவரது தம்பி ஆனந்த் (34). இவருக்கும் திருமணமாகவில்லையாம்.

மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த், அசோக்குடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு இதுபோல ஏற்பட்ட தகராறில் ஆனந்த் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசோக் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். கரியாப்பட்டினம் போலீஸாா் ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.