கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலை தொடா்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இலுப்பையூரணி ஊராட்சி கூசாலிபட்டியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி பாக்கியலட்சுமி (48). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், 30.9.2018இல் மேய்க்க சென்றபோது, காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜகநாதன், ஆய்வாளா் மாரியப்பன் ஆலோசனைப்படி உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரித்ததில் கூசாலிபட்டி, தாமஸ் நகரைச் சோ்ந்த அந்தோணி முத்து மகன் டேவிட் ராஜன் (28), பதினேழு வயது சிறுவன் ஆகியோா் பாக்கியலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அதில், 17 வயது சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்

இளைஞா் கொலை வழக்கு: சிறுவா் உள்பட 4 போ் கைது
தொழிலாளி அடித்துக் கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

கொலை வழக்கு: 4 போ் கைது

சிறுவனைத் தாக்கிய 5 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

