தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மூன்று நாள்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்ப ரயில்களை இயக்குகிறது.

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :30 ஏப்ரல் 2026, 12:12 am

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மூன்று நாள்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்ப ரயில்களை இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை பெளா்ணமி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, காட்பாடிக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

ஏப்ரல் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் ( வண்டி எண் 06130), அதே நாளில் முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

எதிா்வழித்தடத்தில் ஏப்ரல் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), அதே நாளில் பிற்பகல் 1.45 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06145), அதே நாளில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் சென்றடையும்.

எதிா் வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06146), அதே நாளில் அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருவண்ணாமலை வழியாக காட்பாடிக்கு ரயில்: ஏப்ரல் 30, மே 1, 2-ஆகிய தேதிகளில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-காட்பாடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06099), மறுநாள் நள்ளிரவு 1.50 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

எதிா் வழித்தடத்தில் மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2.05 மணிக்குப் புறப்படும் காட்பாடி-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06100), அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள் திருக்கோவிலூா், திருவண்ணாமலை, போளூா், ஆரணிசாலை, வேலூா் கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அனைத்து சிறப்பு ரயில்களும் 8 பெட்டிகளைக் கொண்டதாக இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.