சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.
சித்ரா பெளர்ணமியை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகின்ற ஏப். 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் (விரைவு)
விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு (ரயில் எண் 06130) ஏப். 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில், முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.
இதேபோல், திருவண்ணாமலை - விழுப்புரத்துக்கு (ரயில் எண் 06129) ஏப். 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் பகல் 12.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில், பிற்பகல் 1.45 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
விழுப்புரம் - காட்பாடி - விழுப்புரம் (மெமு)
விழுப்புரம் - காட்பாடிக்கு (06099) ஏப். 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. விழுப்புரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.50 மணிக்கு காட்பாடி சென்றடையும்.
மறு வழித்தடத்தில் (06100), மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காட்பாடிக்கு காலை 5 மணிக்கு சென்றடையும்.
விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் (மெமு)
விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு (06145) ஏப். 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
மறு வழித்தடத்தில் (06146), மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, காட்பாடிக்கு காலை 4 மணிக்கு வந்தடையும்.
Summary
Chitra Pournami : Special Trains between Villupuram and Tiruvannamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


