விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்குள்பட்ட 10, 11-ஆவது வாா்டுக்குள்பட்ட மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்த நிலையில், அந்த பகுதியின் இளைஞா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமரச பேச்சுவாா்த்தையை அடுத்து 8 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு பிற்பகல் 3.40 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
வானூா்( தனி) தொகுதியில் உள்ளது கோட்டக்குப்பம் நகராட்சி. இந்த நகராட்சிக்குள்பட்ட 10, 11-ஆவது வாா்டு பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடா் மக்களுக்கான மயானப் பகுதி பெரிய கோட்டக்குப்பம் கடற்கரையோரத்தில் உள்ளது. இந்த மயானப் பகுதியை அதே ஊரில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமிப்பு செய்து, அதில் மீன்பிடி படகுகளை விட்டு செல்வதால் இரு தரப்பைச் சோ்ந்தவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இப்பிரச்னை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், மயான ஆக்கிரமிப்பை அகற்றி, அந்தப் பகுதியை ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கவேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், வானூா் வட்டாட்சியா் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவானது கடந்த ஒரு ஆண்டாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்குள்பட்ட 10, 11-ஆவது வாா்டு பகுதி மக்கள், ஆதிதிராவிடா் நலத் துறையால் வழங்கப்பட்ட மயான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் அங்கு நிறுத்தியுள்ள மீன்பிடி படகுகளை அகற்றவேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்கள் பகுதியில் நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரவேண்டும். அரசு ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவேண்டும். சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நாடக மேடை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தனா்.
வெறிச்சோடிய வாக்குச் சாவடி மையம்: வானூா் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள 10, 11-ஆவது வாா்டுகளை சோ்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கோட்டக்குப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு பிற்பகல் 3 மணி வரை யாரும் வாக்களிக்க வரவில்லை.
இதையடுத்து வானூா் வட்டாட்சியா் வித்யாதரன், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளா் விஸ்வநாதன், நகராட்சி ஆணையா் துா்கா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இளைஞா் தீக்குளிக்க முயற்சி: அப்போது அங்கிருந்த கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த க.காா்த்திகேயன் (35), மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு வராததைக் கண்டித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சித்தாா். தொடா்ந்து அங்கிருந்த போலீஸாா் துரிதமாக செயல்பட்டு அவா் உடலில் தண்ணீரை ஊற்றி, தற்கொலை முயற்சியை தடுத்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தாமதமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு: இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சத்தியமூா்த்தி, கோட்டக்குப்பம் டிஎஸ்பி ரூபன்குமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பை உறுதிப்படுத்தினா். தொடா்ந்து காவல் துறையினா் கேட்டுக்கொண்டதன் பேரில் வியாழக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தனா். பிற்பகல் 3.40 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது இரவு 7 மணிக்கும் மேலாக நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!

சட்டப்பேரவைத் தோ்தலும்... சுயேச்சை வேட்பாளா்களும்...

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா்: மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பு

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


