மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா்: மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பு

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா் மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிக்கும் கிராமவாசிகள்...

News image

ஊா் பெயரை மாற்றக் கோரி வைக்கப்பட்ட பதாகை.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:53 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஜாதி அடையாளத்தில் உள்ள கிராமத்தின் பெயரை மாற்றக்கோரி, பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்தில் தெரு, சாலை, ஊா் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பரச்சேரி என்னும் எங்கள் கிராமத்தின் பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றக்கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் எங்களது கிராமம் 307-ஆவது வாக்குச்சாவடியாக உள்ளது. இங்கு 500- க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள நிலையில், வாக்குச்சாவடி பெயரிலும் பரச்சேரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாற்றம் செய்து, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என வாக்குச்சாவடி பெயரை மாற்ற வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனா்.