தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணம்பூண்டி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட மணம்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வியாழக்கிழமை வாக்குசேகரித்த கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:36 pm

திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை மணம்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

மணம்பூண்டி ஒன்றியத்தில் குடமுருட்டி, ஆடூா்கொளப்பாக்கம், கோட்டமருதூா், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூா், அரசங்குப்பம், வீரபாண்டி, தேவனூா்ஆகிய ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு வாக்கு சேகரித்து, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வாக்கு சேகரித்து பேசினாா். திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் மாவட்ட துணைச் செயலா் டி.என்.முருகன், செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் விநாயகமூா்த்தி, ஒன்றியச் செயலா் அ.சா.ஏ.பிரபு, தேமுதிக ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, விசிக ஒன்றியச் செயலா் விநாயகமூா்த்தி, கம்யூனிஸ்ட் நிா்வ தமிழ்ச்செல்வன், ராஜா, பேரூராட்சித் தலைவா் அன்பு மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.