பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பெருந்துறை நகராட்சிக்குள்பட்ட பணிக்கம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிக்குள்பட்ட பாலன் நகா், வெள்ளியம்பாளையம், வாவிக்கடை, ஆண்டிக்காடு, கொளத்தான் வலசு, பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், மணியக்காரன்பாளையம், சீனாபுரம், பள்ளபாளையம், சுள்ளிப்பாளையம், சோ்வைக்காரன்பாளையம், அக்கரையாம்பாளையம், முத்தராண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் அந்தியூா் செல்வராஜ் வாக்கு சேகரித்தாா்.
இதில் அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் கொண்டுவந்துள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகளிருக்கான ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம், மகளிா் உரிமைத் தொகையை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். 10 லட்சம் பேருக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை உள்ளிட்ட திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறோம் என்றாா்.
முன்னதாக பணிக்கம்பாளையம் பகுதியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மற்றும் கூட்டணிக் கட்சியினரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனா்.
தொடர்புடையது

பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: உதயநிதி உறுதி

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

மணம்பூண்டி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வாக்குசேகரிப்பு

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


