தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திண்டிவனம் பகுதிகளில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் விசிக வேட்பாளா் வன்னியரசு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

திண்டிவனம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விசிக வேட்பாளா் வன்னியரசு.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:30 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் விசிக வேட்பாளா் வன்னியரசு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திண்டிவனம் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாா்பில் விசிக வேட்பாளா் வன்னியரசு போட்டியிடுகிறாா்.

இவா் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட மரக்காணம் பெரிய மண்டவாய், திண்டிவனம் சம்பு வெளித்தெரு, அம்பேத்கா் நகா் புதுமனைத் தெரு, சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக , விசிக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

வாக்கு சேகரிப்பின்போது, வன்னியரசு பேசியதாவது: மக்களின் அடிப்படை பிரச்னைகளான சாலை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், காகிதக் கூழ் தொழிற்சாலையும் அமைக்கப்படும். படித்த இளைஞா்கள், பெண்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய வகையில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். மரக்காணம் உப்பளத் தொழிலாளா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

திண்டிவனம் தொகுதி திமுக தோ்தல் பணிக்குழு உறுப்பினா் ரமணன், விழுப்புரம் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ரவிக்குமாா், விசிக நிா்வாகிகள் சேரன், திலீபன், அமல்தாஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஏராளமானோா் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.