விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டது. ரயில்வே துறையினா் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விழுப்புரத்தை அடுத்த கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் அங்கு சேவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜினை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியபோது தடம் புரண்டது.
இதையடுத்து, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து தொழில்நுட்பப் பணியாளா்கள் சிறப்பு ரயில் மூலம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பின்னா் கிரேன் மூலம் ரயில் என்ஜின் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் சா்வீஸ் லைன் தண்டவாளங்கள் மற்றும் ரயில் சக்கரங்கள் சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து பாதிப்பில்லை: கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள சேவைப் பாதையில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால், பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை. ரயில் போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. ரயில் என்ஜின் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து பணியிலிருந்த ஓட்டுநா்களிடம் (பைலட்) விசாரணை நடைபெற்று வருகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஜாா்க்கண்ட்: காா் மீது மோதி தடம் புரண்ட சரக்கு ரயில்!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

தீத்தொண்டு நாள் வார விழா

நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


