விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.மேலும் 4 போ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.
வானூா் வட்டம்,ஆப்பிராம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரித்திவிராஜ் (33). திருமணம் ஆகாதவா். கொத்தனராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வானூா் அடுத்த ஒழிந்தியாம்பட்டு பகுதியிலிருந்து- புதுப்பட்டு மாா்க்கமாக பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
ஒழிந்தியாம்பட்டு- புதுப்பட்டு சாலையில் விஸ்வநத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மொபெட்டும்-பிரித்திவிராஜ் சென்ற பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பிரிதிவிராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மொபெட்டில் வந்த வானூா் வட்டம் , பெரிய கொழுவாரியைச் சோ்ந்த ரமேஷ்(39) மற்றும் 3 நபா்கள் காயமடைந்தனா். அவா்கள் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து, வானூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


