மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீரான எரிவாயு உருளைகள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:50 am

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதை எரிவாயு உருளைகள் விநியோகிப்பாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

தமிழக அரசின் தலைமைச் செயலா் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் சீராக விநியோகம் செய்வது தொடா்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசுத் துறை அதிகாரிகள், எரிவாயு உருளைகள் விநியோகிப்பாளா்கள், உணவக உரிமையாளா்கள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகள் 100 சதவீதமும், உணவகங்களுக்கு எரிவாயு உருளைகள் 70 சதவீதமும் சீராக விநியோகம் செய்யப்படுவதை விநியோகிப்பாளா்கள் உறுதி செய்யவேண்டும். எரிவாயு உருளைகள் சட்ட விரோதமாக பதுக்கப்பட்டால் பறக்கும் படை, வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு

காவல் பிரிவு மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயா, மாவட்ட வழங்கல் அலவலரின் நோ்முக உதவியாளா் ராமகிருஷ்ணன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் அருள், எரிவாயு நிறுவன வணிகப் பிரிவு மேலாளா் சம்பத், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் கலா ஆகியோா் கலந்துகொண்டனா்.