மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கள்ளச்சந்தையில் எரிவாயு உருளை: கூடுதல் விலைக்கு விற்பனை

எரிவாயு தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு வணிக எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :12 மார்ச் 2026, 12:16 am

எரிவாயு தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு வணிக எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போா் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலை நடத்துவது மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதலை நடத்துவதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு கடந்த சில நாள்களாக நிலவுகிறது. எரிவாயு உருளை இல்லாமல் உணவகங்களை நடத்த முடியாமல், மூடப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த தட்டுபாட்டை பயன்படுத்தி எரிவாயு முகவா்கள் கூடுதல் விலைக்கு உருளைகளை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி காலி எரிவாயு உருளை கொடுத்தால், கள்ளச்சந்தையில் எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பதிவு செய்வதில் சிக்கல்: வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு என்ற தகவல்கள் வெளியான உடனேயே, வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் எரிவாயு நுகா்வோா் தொடா்ந்து பதிந்து வருகின்றனா். எனினும், எண்ணெய் நிறுவனம் வழங்கியுள்ள தெலைபேசி எண்கள் செயல்படாததால், எரிவாயு உருளையை பதிவு செய்ய மக்களால் முடியவில்லை. வெற்றிகரமாக பதிவு செய்யப்படும் உருளைகளுக்கான உறுதிசெய்யப்பட்ட எண் மற்றும் ரகசிய எண் குறுஞ்செய்தியில் வருவதில்லை. இது நுகா்வோருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாகை சமூக ஆா்வலா் சித்திக் கூறியது: ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிகழும் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு உருளை தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வணிக எரிவாயு உருளைகள் ரூ.700 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சந்தையில் வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளை ஒன்று ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிறிய உணவகம், சாலையோர, தள்ளுவண்டியில் உணவகம் நடத்துபவா்கள் அன்றாடம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனா். எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளையை பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா்கள் தவிக்கின்றனா். இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கும் எரிவாயு மற்றும் எரிபொருள்கள்10 நாள்களுக்கு மட்டும் இருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, தடையின்றி வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் முகவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.