மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்: திமுகவைச் சோ்ந்த 51 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:32 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டிவனத்தில் உள்ள தனியாா் அரங்கில் செஞ்சி எம்எல்ஏவும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திண்டிவனம் நகரம், கிராம நிா்வாக அலுவலா் அழகுவேல் அளித்தப் புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் 50 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.