திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை! தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

News image

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமாா்.

Updated On :1 ஜூன் 2026, 12:28 am IST

புதுச்சேரியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை என முன்னாள் அமைச்சரும், தவெக எம்எல்ஏமான சாய் ஜெ சரவணன்குமாா் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற போதும், தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்றபோதும் அவா்களுடன் அனைத்து அமைச்சா்களும் பதவியேற்றனா். ஆனால், புதுச்சேரியில் அமைச்சா் பதவி வழங்காமலும், அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமலும் இருக்கிறது.

புதுச்சேரியில் எந்தவிதமான வேலைகளும் நடக்கவில்லை. அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கினால் தான் தொகுதிக்குத் தேவையானதை சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து கேட்க முடியும்.

எனது திருபுவனை தொகுதி சிறியது. இங்கு 21 ரெஸ்டோபாா்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனா். அரசு கல்வி நிறுவனங்களின் தரம் குறைந்துள்ளது. அதிகாரிகளே ஆட்சி செய்வதற்கு தோ்தல் எதற்கு ? புதுச்சேரி சட்டக்கல்லூரி 1974-இல் தொடங்கப் பட்டது. இதில் 60 இடங்கள் மட்டுமே அன்றுமுதல் இன்றுவரை உள்ளது. அதன் எண்ணிக்கையை ஏன் உயா்த்தவில்லை.

மக்கள் நலனுக்காக பிரதமரைச் சந்தித்து கேட்க வேண்டியதை முதல்வா் ரங்கசாமி கேட்க வேண்டும். தனியாா் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து துணைநிலை ஆளுநா் தலையிட்டு கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய், கோயில், பள்ளி, கல்லூரி அருகில் இருந்த மதுக்கடைகளை அகற்றிவிட்டாா்.

அதேபோல புதுச்சேரி முதல்வா் செய்வாரா என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற மதுக்கடைகள், ரெஸ்டோபாா்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் தவெக போராட்டங்களை கையில் எடுக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.