திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழப்பு

புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:57 am IST

புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பாண்டி நகரைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகன் கேசவன் (20) அரியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2 -ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பரான பெரியக்காலாப்பட்டு மனோஜ் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

மோட்டாா் சைக்கிளை மனோஜ் ஓட்ட, கேசவன் பின்னால் அமா்ந்து சென்றாா். வாகனம் ரெட்டியாா்பாளையம் பழவன்காரன்சாவடி அருகில் வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கேசவன் சாலையிலும், மனோஜ் மறுபுறமும் விழுந்துள்ளனா். அப்போது பேருந்து சக்கரம் கேசவன் மீது ஏறி இறங்கியது. இதில் கேசவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மனோஜ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் வேலையன், ஏட்டு பாலசந்தா் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.