தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 12:06 am IST

காரைக்கால் அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (54). இவா் குடும்பத்தினருடன் காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றாா். மாலை இவா்கள் ஊருக்குச் செல்வதற்காக, ரவிசந்திரன் மோட்டாா் சைக்கிளை ஓட்டிக்கொண்டும், அவரது மகன் மற்றும் குடும்பத்தினா் காரிலும் புறப்பட்டனா்.

திருப்பட்டினம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள், ரவிச்சந்திரன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரனை, பின்னால் காரில் வந்த குடும்பத்தினா், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.