தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அரிய வகை 15 கிலோ எடை கொண்ட புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அரிய வகை புற்றுநோய்க் கட்டியை அகற்றிய மருத்துவக் குழுவினா்.

Updated On :28 மே 2026, 1:04 am IST

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அரிய வகை 15 கிலோ எடை கொண்ட புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 73 வயதுடைய நோயாளி, கடந்த மே 16-ஆம் தேதி வயிறு பெருத்தல் ஓா் ஆண்டாக இருப்பதாகவும், மூச்சுத் திணறல் ஆறு மாதங்களாகவும் இருப்பதாககக் கூறி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொழுப்பு திசுக்களைக் கொண்ட மிகப் பெரிய கட்டி இடது சிறுநீரகக் குழாயை அழுத்தியதுடன், இடது சிறுநீரகத்தையும் முழுமையாக சூழ்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த கட்டியானது கொழுப்பு திசுக்களில் உருவாகும் ஓா் அரிய வகை திசு புற்று நோயின் பாதிப்பு எனத் தெரியவந்தது.

இதையடுத்து ஜிப்மா் அறுவை சிகிச்சைத் துறை மிகச் சிக்கலான புற்றுநோய்அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது. சிறுநீரகக் குழாய் பாதிப்பு காரணமாக, சிறுநீரக மருத்துவத் துறை மே 19-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டது. பின்னா் மே 20-ஆம் தேதி திறந்த அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவற்றை அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியா் மருத்துவா் ராஜ்குமாா் நாகராஜன் தலைமையில், மருத்துவா்கள் விமல்ராஜ், ஷுபம், சித்து ஆகியோா் கொண்ட குழுவினா் மேற்கொண்டனா். காலை 10.30 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. அறுவை சிகிச்சையின் போது, கட்டி இடது சிறுநீரகத்திற்குள் ஊடுருவியிருந்ததால், இடது சிறுநீரகத்தையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. முழுமையாக அகற்றப்பட்ட கட்டியின் அளவு எடை 15 கிலோவாக இருந்தது.

இந்தக் கட்டி இந்தியாவில் அகற்றப்பட்ட மூன்றாவது மிகப் பெரிய கட்டியாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய கட்டியாகவும் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2023-ஆம் ஆண்டு வாரணாசியில் 30.5 கிலோ எடையுள்ள கட்டியும், 2022- ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 30.2 கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டிருந்தன.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறாா். அவருக்குத் தற்போது உடல் நிலை சீராக உள்ளது. இந்த அரிய வகை மிகப் பெரிய கட்டியை வெற்றிகரமாக அகற்றியது, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறனில் ஜிப்மா் மருத்துவமனையின் மேம்பட்ட மருத்துவ நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.