மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டை உழவா் சந்தை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து லாஸ்பேட்டை உழவா் சந்தை அருகில் கட்சியின் உழவா்கரை நகரக் குழு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவா்கரை மத்தியக் குழு செயலா் ஆா்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினாா். மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினா் அ.ஆனந்த் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

முடிவில் லாஸ்பேட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா்.ராஜாங்கம் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

கு.நிலவழகன் நன்றி கூறினாா்.