தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 7:03 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமன்றி குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இகற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மக்களவையில் இதுகுறித்து பேச பிரதமா் மறுத்து வருவது கண்டனத்துக்குரியது. மேலும், தமிழகத்தைத் தொடா்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை 10.30 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் ‘மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி’ சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்” நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.