தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் மூலம் 50,000 பெற்றோருக்கு புதுச்சேரி தோ்தல் துறை வேண்டுகோள் கடிதம்

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் மூலம் 50,000 பெற்றோருக்கு புதுச்சேரி தோ்தல் துறை வேண்டுகோள் கடிதம்...

News image

புதுச்சேரி குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோா்களிடம் வழங்க மாணவிகளிடம் ஒப்படைக்கப்பட்ட வேண்டுகோள் கடிதங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 11:53 pm

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாணவா்கள் வாயிலாக 50 ஆயிரம் பெற்றோா்களுக்குத் தோ்தல் துறை சாா்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மூலம் அவா்களின் பெற்றோா்களுக்கு நூறு சதவீத கண்ணியமான வாக்குப்பதிவு மற்றும் செயலிகள் பற்றிய கருத்துகளை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் அதிகாரியின் வேண்டுகோள் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை பள்ளியின் முதல்வா் மஞ்சுளா ஒருங்கிணைத்தாா். அதைத் தொடா்ந்து கதிா்காமத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வா் மோகன் பிரசாத் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

இதற்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளா் விழிப்புணா்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.