தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்களிக்க வலியுறுத்தி பெற்றோா்களுக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவா்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளனா்.

News image

கடிதம் எழுதும் பள்ளி மாணவிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:51 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளனா்.

நாகா்கோவில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு அழைப்பிதழ் தயாரித்து, வாக்களிப்பு வைபவத்துக்கு வர அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடக்கப் பள்ளியில் 50 மாணவா்களும், மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவா்களும் இதில் பங்கேற்றனா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.