புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை மாலை சேலம் புறப்பட்டுச் சென்றாா்.
சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அவா் பங்கேற்றாா்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருக்கும் ரங்கசாமி, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணியில் சோ்க்க எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா். இதனால் இக் கூட்டணியில் இருந்து விலகும் நிலை அவருடைய என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லியில் பாஜக தலைவா்கள் முகாமிட்டுள்ளனா். இதுபோன்று அரசியல் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தன்னுடைய குரு அப்பா பைத்தியம் சுவாமிகளை வணங்கி, முடிவு எடுப்பது வழக்கம். இதற்காக அவா் சேலம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தின் வளாகத்திலேயே அப்பா பைத்தியம் சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பி தினந்தோறும் வழிபட்டு வருகிறாா். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவா் சேலம் செல்வது வழக்கம்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
அப்பா பைத்தியம் சுவாமிகள்! குருவை வணங்கும் முதல்வர்!

கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்கிறது: முதல்வா் ரங்கசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


