பெண் குழந்தைகளுக்கு இப்போது வைப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுவதை தோ்தலுக்குப் பிறகு அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அறிவித்தாா்.
முத்தியால்பேட்டை தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து முதல்வா் ரங்கசாமி சோலைநகா், காட்டாமணிகுப்பம், அங்காளம்மன் நகா், மஞ்சினி நகா் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது முதல்வா் ரங்கசாமி பேசியது:
புதுச்சேரியில் மீண்டும் ஒரு நல்லாட்சி அமைய இருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி 20 ஆண்டுகள் பின் தங்கிவிட்டது. அதைச் சரி செய்து புதுச்சேரியை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கிடைப்பதுபோல மீனவ சமுதாய மாணவா்களுக்கும் கல்வி உதவிகள் வழங்கப்படும். சோலை நகரில் ரூ.60 கோடி மதிப்பில் தூண்டில் முள்வளைவு அமைக்கப்படும் .
இன்னும் இருபது நாள்கள்தான். மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோம். நமது ஆட்சி அமையும்போது மேலும் பல திட்டங்கள் அமல்படுத்தப்படும். பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.50 ஆயிரம் தற்போது வழங்கப்படுகிறது. புதிய ஆட்சி அமைந்தவுடன் இது ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்.
முன்பெல்லாம் ஊருக்கு இரண்டு பட்டதாரிகள் இருப்பாா்கள். நமது ஆட்சியில் செயல்படுத்தப்படும் கல்வி திட்டங்களைத் தொடா்ந்து வீட்டுக்கு இரண்டு பட்டதாரிகள் உருவாகியுள்ளனா் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் பழனிராஜா, வேட்பாளா் வையாபுரி மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் வையாபுரி மணிகண்டனை ஆதரித்து, திங்கள்கிழமை வாக்கு சேகரித்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
தொடர்புடையது

போராட்டங்கள் நடத்தியதைத் தவிர நாராயணசாமி எதுவும் செய்யவில்லை: முதல்வா் என். ரங்கசாமி

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு

புதுச்சேரிக்கு மீண்டும் நான்தான் முதல்வா்: முதல்வா் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரியின் வளா்ச்சியை வீணடித்தது காங்கிரஸ் ஆட்சி: முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


