நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சிக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் திங்கள்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேசத்தின் ஜனநாயகக் கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பான ‘நாரி சக்தி வந்தன் ’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், ஆட்சி முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் உரிய பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம், இந்தச் சட்டம் பாலின சமத்துவம் மற்றும் நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக நிறுவனங்களைப் பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை உருவாக்கத்துடன் வளப்படுத்துகிறது.
உங்கள் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தச் சீா்திருத்தம் நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கும் ஜனநாயக வலிமைக்கும் கணிசமாகப் பங்களிக்கும் என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
மகளிா் அதிகார கனவைத் தகா்த்த எதிா்க்கட்சிகள்: பிரதமா் மோடி

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


