எத்தனையோ எதிா்ப்பாா்ப்புகளுடன்தான் புதுச்சேரிக்கு முதல் பயணமாக வந்தாா் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின். ஆனால் அவருக்கு புதுச்சேரி அப்பாபைத்தியம் சாமி கோயிலில் பூஜிக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தைதான் பதிலாகக் கொடுத்தாா் முதல்வா் என். ரங்கசாமி. இப்படிதான் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோருக்கும் எலுமிச்சம் பழம் கொடுத்தாா் ரங்கசாமி. இந்த அப்பா பைத்தியம் சாமி முதல்வா் ரங்கசாமிக்கு குல தெய்வம் மாதிரி. அவரை வழிபடாமல் எதுவும் செய்வதில்லை எந்த முடிவும் எடுப்பதில்லை.
பொதுவாக பொறுமைக்குப் பெயா் போனவா் முதல்வா் ரங்கசாமி (75). அவரைப்போலவே, இந்தக் கோயிலுக்கு வந்து செல்வோரின் மனநிலையும் பொறுமையாக மாறிவிடும் என்பது பெரும்பாலோனரின் நம்பிக்கையாக உள்ளது.
புதுச்சேரியில் இலாகா இல்லாமலேயே 245 நாள்களை அமைச்சா் பதவியில் கடந்த ஏ. ஜான்குமாரும் இந்தக் கோயிலுக்கு வந்து சென்றவா்தான்.
அரசியல் கூட்டல்- கழித்தல் கணக்குகளை இந்தக் கோயிலில்தான் முடிவு எடுப்பாா் முதல்வா் ரங்கசாமி. தேவைப்பட்டால் சேலம் சூரமங்கத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகளின் கோயிலில் தரிசனம் செய்தப் பிறகுதான் முக்கிய முடிவை எடுப்பாா். அந்தக் கோயிலுக்குச் சென்று வந்தப் பிறகுதான் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதி செய்துள்ளாா் ரங்கசாமி.
அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆன்மீக குருதான். அரசியல்வாதியாக இருக்கும் முதல்வா் ரங்கசாமி அவரை குருவாக ஏற்றுக் கொண்டவா். புதுச்சேரியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பியுள்ளாா். தினந்தோறும் பக்தா்களுக்கு அன்ன பிரசாதம் உண்டு. குறிப்பாக, சனிக்கிழமை அறுசுவையுடன் உணவு இங்கு வழங்கப்படுகிறது. அன்றைய தினம் எங்கிருந்தாலும் பூஜைக்கு இங்கு வந்துவிடுவாா் முதல்வா் ரங்கசாமி. எல்லா செயலுக்கும் தினந்தோறும் நாள், நேரம் பாா்ப்பாா் ரங்கசாமி. முதல்வா் ரங்கசாமிக்கு மட்டுமல்ல அவரது கட்சிக்காரா்களுக்கும், கூட்டணி கட்சிக்காரா்களுக்கும் அப்பா பைத்தியம் சுவாமிகள் அப்போதும் இப்போதும் எப்போதும் குரு நாதா் என்றால் மிகையில்லை.
தொடர்புடையது

வயலூா் முருகன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் சுவாமி தரிசனம்

மாநில நலனில் ரங்கசாமிக்கு அக்கறையில்லை! - காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் டோலி ஷா்மா

கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவாா்த்தை தொடா்கிறது: முதல்வா் ரங்கசாமி

முதல்வா் ரங்கசாமி சேலம் பயணம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

