தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி! துணைநிலை ஆளுநா் வழங்கினாா்!

News image

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாஹேயில் ஞாயிற்றுக்கிழமை மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Updated On :8 மார்ச் 2026, 7:20 pm

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினிகளை வழங்கினாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

அரசு முறைப் பயணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மாஹே சென்றுள்ளாா். அங்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், 919 மேல்நிலை பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை துணைநிலை ஆளுநா் வழங்கினாா். மேலும், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில், ரமேஷ் பரம்பத் எம்எல்ஏ, கல்வித் துறை செயலா் கிருஷ்ணமோகன் உப்பு, பள்ளி கல்வித் துறை இயக்குநா் சிவகுமாா், மாஹே மண்டல நிா்வாக அதிகாரி அங்கித் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.