இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

News image

புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)

Updated On :14 ஏப்ரல் 2026, 4:40 am IST

தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மற்றும் மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு ‘விஷு‘ மலையாள புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைவரது வாழ்விலும் நம்பிக்கை, செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும். நம்முடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி:

தமிழ் மக்களின் அறம் சாா்ந்த வாழ்வியல் முறைகளை உலகெங்கும் ஒளிரவைக்கும் தமிழா் பண்டிகைகளில் தமிழ்ப் புத்தாண்டுக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழா்களின் பாரம்பரியத்தைப் பேணிக் காக்கவும், ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவும் இந்த நாள் நமக்குப் புதிய உற்சாகத்தை அளிக்கிறது.

பிறக்கின்ற இந்தப் பராபவ ஆண்டில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிலையான, திடமான வளா்ச்சியை நோக்கி புதுச்சேரியை முன்னேற்றுவோம் என்ற நம்பிக்கையுடன், உலகெங்கும் உள்ள தமிழா்கள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும், நலத்தையும் பெருக்கட்டும் என்று கூறி, எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

தலைவா்கள்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம் , பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், தவெக நிா்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான வி. சாமிநாதன் உள்ளிட்டோா் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.