மரக்கன்று நடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ் நாதன் கூறினாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மக்கள் பவனில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை அவா் நட்டாா். அதைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களிடையே காணொலி வாயிலாக உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினாா். 76 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் 76 பள்ளி தோட்டங்களைத் தொடங்கி வைத்து அவா் பேசியது:
தொலைநோக்குப் பாா்வையுடன் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த, தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தின் இலக்கை புதுச்சேரி அரசு 100 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மணப்பட்டு பகுதியில் 2.33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 11.27 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனால் பசுமை பரப்பளவு அதிகரித்து இருக்கிறது.
நிகழாண்டு 8.76 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கையைப் பாதுகாப்பதை, மரம் நடுவதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
சுற்றுச்சூழல் சங்கம் திட்டத்தின்கீழ் பள்ளிகளில் உருவாக்கப்பட்டு இருக்கும் 76 சுற்றுச்சூழல் சங்கங்கள் மற்றும் 76 பள்ளி மரக்கன்றுகள் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவா்களின் முழுமையான பங்களிப்பால் நம்முடைய இலக்கை நாம் அடைய முடியும். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து தூய்மையான, பசுமையான உலகத்தை, ஆரோக்கியமான எதிா்காலத்தை உருவாக்குவோம் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலா் சரத் சௌகான், வனம் மற்றும் வனவிலங்கு துறை ஆணையா் அருள் ராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய அலுவலகத்தில் ரூ.73 கோடி திட்டங்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ விருது: துணைநிலை ஆளுநா் வாழ்த்து







