டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 60 ஊழியா்கள் கைது

News image
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட வியாழக்கிழமை ஊா்வலமாக வந்த பொதுப் பணித் துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்ட குழுவினரை காமராஜா் சதுக்கம் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த போலீஸாா்.
Updated On :22 ஜனவரி 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டபோது 21 பெண்கள் உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமையில் காமராஜா் சதுக்கம் அருகே வியாழக்கிழமை திரண்டனா். அங்கிருந்து சங்கு ஊதி, கொட்டு அடித்து ஊா்வலமாக துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட புறப்பட்டனா்.

அவா்களை சிறிது தூரத்திலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஊழியா்கள் தரையில் அமா்ந்து சங்கு ஊதியும், கொட்டு அடித்தும் முழக்கமிட்டனா். தொடா்ந்து தடையை மீறி செல்ல முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து, 21 பெண்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இதுவரை யாரும் அரசு தரப்பிலிருந்து பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறியும் அதைக் கண்டித்தும் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவா்கள் நேராகக் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தினா்.

அப்போது முதல்வா் ரங்கசாமி வெள்ளிக்கிழமை அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.