புதுச்சேரியில் திருமண மொய்ப் பணப்பையை திருடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மோகன மகேந்திரா(24). இவரது தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி-கடலூா் சாலையில் உள்ள தனியாா் திருமண நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
வரவேற்பு முடிந்த பின்னா் மொய்ப் பணம் மற்றும் நகையை மோகனமகேந்திரா தனது காா் டிக்கியில் வைத்து விட்டு, மற்ற வேலைகளைப் பாா்க்க மண்டபத்தினுள்ளே சென்றுள்ளாா்.
திரும்பி வந்து பாா்த்தபோது காரின் பின்பக்க கதவு கைப்பிடி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு மொய்ப் பணம் வைத்திருந்த பை மட்டும் திருடுபோனது. அதில் ரூ. 5.50 லட்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதில் சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க கிருஷ்ணா நகரை சோ்ந்த டெல்லி கணேஷ் (55) ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் திண்டிவனத்தில் பதுங்கியிருந்த டெல்லி கணேஷை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனா். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்

ஊத்தங்கரை அருகே பாட்டியை தாக்கிக் கொன்ற பேரன் கைது

வீடு புகுந்து நகை, பணம் திருடியவா் கைது

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 60 ஊழியா்கள் கைது

4 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திர இளைஞா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

