டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரியில் தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் போராட்டம் வாபஸ்

தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

News image
மாநில தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட ஊழியா்கள்.- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:41 pm

Syndication

தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

புதுச்சேரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்கள் சங்கத் தலைவா் ஜூலி சாரா, செயல் தலைவா் வெற்றி, பொதுச் செயலா் பிரகதீஸ்வரன், பொருளாளா் தனலட்சுமி ஆகியோா் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சுகாதாரத் துறை தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயா்வு கோரி சுகாதாரத் துறை செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில், ஏற்கெனவே அரசு அறிவித்திருந்த சம்பள உயா்வுத் தொகையை உடனடியாக வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய 5 சதவீத ஆண்டு ஊதிய உயா்வையும் சோ்த்து வழங்குவது என ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசின் இந்த உறுதிமொழியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனா்.