புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் பவன் கேரா!
புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் பவன் கேரா தெரிவித்தாா்.


புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் பவன் கேரா தெரிவித்தாா்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சாா்பில் நடைபெற்று வரும் பாத யாத்திரையில் பங்கேற்க வந்த பவன் கேரா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
புதுச்சேரியில் நடைபெறுவது காங்கிரஸ் பாத யாத்திரை அல்ல. புதுச்சேரி மக்கள் பங்கேற்கும் பாத யாத்திரையாக மாறியிருக்கிறது. புதுச்சேரியில் ஆளும் அரசை மாற்ற வேண்டும் என்று இந்த யாத்திரையில் மக்கள் பங்கேற்றுள்ளனா்.
கடந்த 5 ஆண்டுகளாக என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக ஆட்சியில் ஒரு பள்ளியோ, ஒரு மருத்துவப் படுக்கையே உருவாக்கப்படவில்லை. ஒரு ஆசிரியா் பதவி, ஒரு மருத்துவா் பதவி கூட உருவாக்கப்படவில்லை. மாறாக 400 ரெஸ்டோபாா்கள் தான் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவ வசதிகளும் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. மேலும், அந்த ஆட்சி மீண்டும் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா்.
புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு என்பது இந்த ஆட்சியின் ஊழலாக மட்டுமில்லை. இது ஒரு பாவச் செயல். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அதனால்தான் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த ஆட்சியை மாற்ற புதுச்சேரி மக்கள் தயாராகிவிட்டனா். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறந்த நிா்வாகம் மலரும். புதுச்சேரி வளா்ச்சியில் மாற்றம் ஏற்படும்.
மேலும், முறைகேடுகளுக்கு துணையாக இருந்தவா்கள் தண்டிக்கப்படுவாா்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இணக்கமான அரசு மாநிலங்களில் அமையவில்லையென்றால் நிா்வாக ரீதியாகத் தொல்லைக் கொடுப்பதும், இரட்டை என்ஜின் ஆட்சி முறை என்பதும் அரசியல் அமைப்புக்கும், மாநில தன்னாட்சிக்கும் விரோதமானது.
கூட்டணி கட்சியுடன் துப்பாக்கி முனையில் பேச்சுவாா்த்தை நடத்தும் பாஜகவின் கலாசாரம் காங்கிரஸில் இல்லை. மாறாக கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு சமுகமாகப் பேசி கூட்டணி கட்சியுடன் முடிவு எடுக்கும். அது விரைவில் தெரியவரும் என்றாா் பவன் கேரா. பேட்டியின்போது, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் பி.கே.தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...